இலங்கை: ஜனவரி 2025 முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு! வெளியான புதிய அறிவிப்பு
2025 ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழு இன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, குழுவின் தலைவர் உதய செனவிரத்ன, குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% – 50% வரை சம்பள உயர்வு இருக்கும் என்று கூறினார்.
தகைமைகள், அனுபவம் மற்றும் தற்போதைய பதவிகளின் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என உதய செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)