இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தம்: வெளியான முக்கிய தகவல்கள்

கல்வி சீர்திருத்த முன்மொழிவு தொடர்பில் பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை 2025ஆம் ஆண்டின் முதல் தவணையில் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் மாணவர்கள் 17 வயதிற்குள் பாடசாலையை முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவற்றுள் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மதிப்பீடுகளுக்கு புள்ளிகளையும் பரீட்சைகளுக்கு குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்கி பரீட்சையை இலகுபடுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், கல்வி பொதுத்தராதர சாதாரண தர தேர்விற்கான பாடங்களை 9 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 45 times, 1 visits today)