SpaceX மற்றும் X தலைமையிடங்களை டெக்சாஸிற்கு மாற்றும் எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எக்ஸில் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.