சங்கரின் பிரம்மாண்டம் – வெளியானது இந்தியன் – 2 டிரைலர்

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் – 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மும்பையில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியன் – 2 டிரைலரை வெளியிட்டனர்.
டிரைலரில் இடம்பெற்ற கமல்ஹாசன் காட்சிகளும் வசனங்களும் கவனம் பெற்று வருகின்றன.
இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)