யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்த்தர்களை சந்தித்துப் பேசிய சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானமும்
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் பங்கேற்றனர்.குறித்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை கோருவது தொடர்பாக பேசப்பட்டதாக அறியப்படுகிறது.
(Visited 22 times, 1 visits today)