இந்தியாவில் படகு விபத்து : குழந்தைகள் உள்ளிட்ட சிறுவர்கள் குழு மாயம்!
இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தபாலிலிருந்து பத்வாரா நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.





