போர் அச்சம் – சரிந்தது அமெரிக்க பங்கு விலைகள்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைய கூடும் என்ற அச்சம் Wall Street பங்குச் சந்தையில் எதிரொலித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Dow Jones தொழிலியல் குறியீடு 475 புள்ளிகள் குறைந்தது. ஒக்டோபருக்குப் பிறகு Wall Street பங்குகளின் மோசமான வீழ்ச்சி இதுவாகும்.
வார இறுதிக்குமுன் வந்திருக்கும் புதிய உலக அரசியல் பதற்றம் பங்குகளின் விற்பனைக்குக் காரணமாக அமைந்ததாக Briefing.com கூறியது.
அரச தந்திரப் பாதுகாப்பை மீறி இஸ்ரேல் ஈரானியத் துணைத் தூதரகத்தைத் தாக்கியதால் ஈரான் பதிலடி தரும் என்ற கவலை சந்தைக் கவனிப்பாளர்களிடம் தெரிகிறது.
முன்னதாக எண்ணெய், தங்கம் இரண்டும் விலையேற்றத்தைக் கண்டன. எண்ணெய் விலை இரண்டு விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்து பிறகு தணிந்தது.
தங்கம் அவுன்சுக்கு இரண்டாயிரத்து நானூறு அமெரிக்க டொலரைத் தாண்டியது.
(Visited 11 times, 1 visits today)