மோசமான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் : உணவுக்காக மக்கள் பாரிய சிரமத்தில்
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கி 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களால் அந்நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் இடையே ஒரு கிலோ அரிசி விலை 70 ரூபாயில் இருந்து 335 ரூபாவா உயர்ந்துள்ளதாகவும், மேலும் பழங்களின் விலையும் சடுதியாக உயர்ந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.