உலக நாடுகளுக்கு தொடர் அதிர்ச்சி கொடுக்கும் வடகொரியா
வட கொரியா இன்று இரண்டு குறுந்தொலைவு புவியீர்ப்பு ஏவுகணைகளைச் சோதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை வாரங்களில் வட கொரியா தொடர்ந்து ஆயுதச் சோதனைகளை நடத்தி வருகிறது.
பியோங்யாங்கின் புதிய ஏவுகணைச் சோதனைக்கு, சோல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அண்மைச் சோதனை ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை மீறிய தூண்டுதல் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானும் வட கொரியாவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கே உள்ள ஹூவாங் ஹே (Hwang-hae) வட்டாரத்திலிருந்து வட கொரியா பாய்ச்சிய ஏவுகணைகள் சுமார் 370 கிலோமீட்டர் பறந்து ஜப்பானியக் கடலில் விழுந்ததாக சோல் கூறியது.
சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு வெளியே இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
கடலடி அணுவாயுத ஆளில்லா வானூர்தியையும் கப்பல் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்ததாக வட கொரியா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் அண்மையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
அது போருக்கான ஒத்திகை என்று கருதுகிறது வட கொரியா. அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளைப் பியோங்யாங் அதிகரித்துள்ளது.