ஏமன் கடற்கரையில் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்
ஏமன் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல் ஒன்று எந்த நேரத்திலும் மூழ்கும் நிலையில் உள்ளதாகவும், இது சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கை நியூஸிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமன் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு எப்.எஸ.ஓ சேஃபர என்ற கப்பல் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்களுடன் கைவிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எந்தநேரத்திலும், வெடிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு மட்டுமன்றி மனிதாபிமான பேரழிவும் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் டேவிட் கிரெஸ்லி, செங்கட் கருங்கடலாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
இது ஒரு பழங்கால கப்பல் எனவும், அந்த காலத்தைச் சேர்ந்த 1976 இன் சூப்பர் டேங்கர், எனவே பழமையான கப்பல் என்பதோடு கைவிடப்பட்டதால், எந்த நேரத்திலும் மூழ்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.