அமெரிக்கா – பென்சில்வேனியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய யுவதி பலி!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21ம் திகதி நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷி (21) என்ற பெண் உயிரிழந்தார்.இத்தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பென்சில்வேனியாவில் மார்ச் 21ம் திகதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது.
அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
(Visited 41 times, 1 visits today)





