இந்திய தலைநகரம் முடங்கும் வகையில் நடைபெற்ற உழைக்கும் மக்கள் பேரணி.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. க அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராடுவதாக அறிவித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் – விவசாயிகள் இணைந்து நடத்தும் பேரணி இன்று நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் இடம்பெற்றது.
பல்வேறு மதம், சாதி, மொழி, இனம் என பிரிந்த போதிலும் உழைக்கும் மக்களாய் கரம் கோர்த்து நடைபெற்ற இப்பேரணியில் பணவீக்கம், வேலையின்மை, ஊதிய உயர்வு, தொழிலாளர் விரோத சட்ட ரத்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கவேண்டும் என போராட்ட முழக்கங்கள் எழுப்பினர்.
புதுடெல்லியின் அதிர்வலை நாடு முழுவதும் கடத்த வேண்டும், உழைக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் பேரணியின் நியாயம் உணர வேண்டும், மக்கள் பிற்போக்கு அடையாளங்களை கடந்து வர்க்கமாக அணிதிரளவேண்டும், முதலாளித்துவ – பாசிச சக்திகளை வேரறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)