இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின்படி, இலங்கையில் பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 14 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நுரையீரல் காசநோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் நிசாயா காதர் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையை இலவசமாக நடத்தி வருகிறோம்.
குறிப்பாக, மாவட்டம் தோறும் மார்பு நோய் மருத்துவ மனைகள் உள்ளன. மேலும், சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மருத்துவமனைகளில் செய்துள்ளோம்.
மேலும், இதை அகற்ற தேவையான நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருகிறோம். 2035-க்குள் நோயை ஒழிக்க, நோயாளிகளின் எண்ணிக்கையை 90% ஆகவும், இறப்பு எண்ணிக்கையை 95% ஆகவும் குறைக்க வேண்டும். மேலும், காசநோயாளியின் செலவைக் குறைக்கவும் எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்