துருக்கியில் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்த திட்டம் : 30இற்கும் மேற்பட்டோர் கைது!
துருக்கியில் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துருக்கியில் வரும் 31 ஆம் திகதி உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வடமேற்கு துருக்கியில் உள்ள சகரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் சோதனையின் போது ஆயுதங்கள், பணம் மற்றும் “நிறுவன ஆவணங்களை” மீட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, “எந்தவொரு பயங்கரவாதிகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் பாதுகாப்புப் படைகளின் உயர்ந்த முயற்சிகளுடன் நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தடையின்றி தொடர்வோம் எனக் கூறியுள்ளார்.
சட்டவிரோத மசூதிகள் மற்றும் மதப் பள்ளிகளில் இருந்து செயல்படும் குற்றவாளிகள் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பல தாக்குதல்களை துருக்கி சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.