ஐந்தாண்டு திட்டத்தை இவ்வருடம் அமுல்படுத்த திட்டமிடும் சீனா!
14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் இரண்டாவது அமர்வு இன்று (05.03) காலை பெய்ஜிங்கில் ஆரம்பமானது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் சுமார் 2900 பிரதிநிதிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த இரண்டாவது அமர்வில், சீனப் பிரதமர் 2024 மாநில வேலை அறிக்கையை வழங்கினார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ள சீனா, பிரதான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை முழுமையாக அடைந்து நவீனமயப்படுத்தப்பட்ட சோசலிச நாட்டை உருவாக்க உழைத்து வருவதாக சீனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024ல் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இந்த ஆண்டு சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 75 வது ஆண்டு நிறைவாகும், மேலும் இந்த ஆண்டு ’14 வது ஐந்தாண்டு திட்டத்தை’ செயல்படுத்துவதற்கான முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.