கென்யாவில் குப்பைக் கிடங்கில் 6 பெண்களின் சடலங்கள் மீட்பு

கென்யாவில் நைரோபி நகரில் குப்பைக் கிடங்கில் சாக்கு மூட்டைகளில் குறைந்தது 6 பெண்களின் சிதைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, கைவிடப்பட்ட குவாரியில் இருந்து மேலும் 5 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு சனிக்கிழமை கூறியுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகளில் மூன்றில் துண்டிக்கப்பட்ட கால்கள் மற்றும் இரண்டு உடற்பகுதிகள் உட்பட பெண் உடல் பாகங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 54 times, 1 visits today)