அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்தி கொலை

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குயின்ஸில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பலத்த காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
11 வயது சிறுமி, 12 வயது சிறுவன், 44 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)