ஐரோப்பா செய்தி

23 பிரித்தானிய குடிமக்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த ரஷ்யா!

23 பிரித்தானிய  குடிமக்கள் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக உக்ரேனிய இராணுவத்தின் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் அதிகாரிகள்,  பயிற்றுவிப்பாளர்களை வழங்கிய அமைப்புகளின் தளபதிகள் தடைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஜிங்க் நெட்வொர்க் கார்ப்பரேஷனின் உயர் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சுதந்திர ஊடகவியலாளர்களை துன்புறுத்தியதில் தொடர்புடைய பல நீதிபதிகள் மற்றும் இங்கிலாந்து சிறைச்சாலை அமைப்பின் அதிகாரிகள் மீதும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக  மனித உரிமை மீறல் வழக்குகளுக்கு பெயர் பெற்ற லண்டனில் உள்ள பெர்மார்ஷ் சிறையின் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி