இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடும் மழை காரணமாக நாட்டின் சுலவேசி தீவுகள் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்டிருந்த 35 பேர் மண்சரிவில் சிக்கிய ஐந்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்த 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன 19 பேரைக் கண்டறிய நிவாரணப் பணியாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 67 times, 1 visits today)





