விளம்பரங்களுக்கு தடையா?
ஜனவரி 1, 2025 முதல், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கிராமப்புற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இடம்பெறும் விளம்பரங்களை வெளியிடுவது தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில நோய்களை உணவினால் குணப்படுத்த முடியும் என்ற பிரச்சாரம் தவறானது என பிரதிப் பணிப்பாளர் நாயகம் அங்கு தெரிவித்திருந்தார்.
ஒருவர் வருடத்திற்கு 150 கிலோவுக்கும் அதிகமான அரிசியை உண்பதாகவும், வாரத்திற்கு 2.8 கிலோவை உண்பதாகவும், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற உணவுகளினால் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு தேசமாக நாம் உட்கொள்ளும் அரிசியின் அளவு அதிகமாக உள்ளது.
இதை மாற்ற, ஆற்றல் உட்கொள்ளலில் ஒரு பகுதியை ஒதுக்குவது பொருத்தமானது என்றார்.