பார்சிலோனாவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஸ்பெயின்- பார்சிலோனாவில் துருக்கிய விமானமொன்று இன்று அவசரமாக தரையிறங்கியுள்ளது.
விமானத்தில் உள்ள ஒரு பயணி, இணையத்தில் வலையமைப்பொன்றை உருவாக்கி, அதில் வெடிகுண்டு மிரட்டல் குறியீட்டை வைத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பெயினின் சிவில் காவல் துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.





