தாய்லாந்தில் வானில் இருந்து கொட்டிய பெருந்தொகை பணம் – வெளியான காரணம்
தாய்லந்தைச் சேர்ந்த பௌத்தத் துறவி ஒருவர் 150,000 பாத் ரொக்கத்தை வானிலிருந்து வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது 46ஆம் பிறந்தநாளையும் துறவியான 24ஆம் ஆண்டையும் கொண்டாடும் வகையில் அவர் இந்த செயலை செய்துள்ளார்.
Luang Phor Kaen எனும் அவர், அலங்கரிக்கப்பட்ட பாரந்தூக்கியினுள் அமர்ந்தவாறு ரொக்கத்தையும் பரிசுகளையும் காற்றில் பறக்கவிட்டார்.
லம்டுவான் (Lamduan) வட்டாரத்தில் உள்ள வாட் சுவான்னராட் ஃபொதியராம் ஆலயத்தில் (Wat Suwannarat Phothiyaram) இச்சம்பவம் நிகழ்ந்தது.
பௌத்தத் துறவிகளின் கலாசாரப்படி அவர்கள் பணம், பொருள், சொத்து என எதையும் சேர்த்து வைக்கக்கூடாது. மீறிச் செய்தால், அவர்கள் மோட்சம் பெற முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.
தம்மிடமுள்ள பணத்தைச் சமுதாயத்திற்கு விசித்திரமான முறையில் லுவாங் திருப்பித் தந்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)