சிங்கப்பூரில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா அலை!
சிங்கப்பூரில் மற்றுமொரு கொரோனா நோய்ப்பரவல் அலை ஏற்பட்டுள்ள போதிலும் தொற்றுச் சம்பவங்கள் கடுமையாக இல்லை எனவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
தற்போது பரவியுள்ள தொற்றுச் சம்பவங்கள் XBB துணை ரகக் வைரஸ்களின் கலவைகளால் ஏற்பட்டவை என்று அமைச்சு தெரிவித்தது.
கடந்த மார்ச் (2023) மாதத்தின் கடைசி வாரத்தில் 28,410 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் அது இரு மடங்கு அதிகம். முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 14,467 ஆகப் பதிவானது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கின்றது. மார்ச் மாதத்தின் கடைசியில் அந்த எண்ணிக்கை சரிந்தது.
சளி போன்ற இதர நிரந்தர சுவாச நோய்களைப் போன்றே கொரோனா நோய்ப்பரவல் அவ்வப்போது ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தடுப்பூசி போடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.