உக்ரைனின் மற்றுமொரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படையினர்!
உக்ரைனின் தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள பிலோஹிரியா (Bilohirya ) கிராமத்தை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளன.
ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள வோரோனெஷ் (Voronezh) கரத்தின் மீது ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் 17 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த தாக்குதலின்போது 10 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிப்பிற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் ரஷ்யா தனது சக்திவாய்ந்த புதிய ஓரெஷ்னிக் ஹைப்பர்சோனிக் ( Oreshnik hypersonic) ஏவுகணையை இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





