இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமனம்?
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் மூத்த பணியக அதிகாரி ஆவார்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பணியகத்தை மேற்பார்வையிடுவதற்கும் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் செயற்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
‘கடைசி இராஜதந்திர சந்திப்பு’ – விடைபெற்றார் அமெரிக்க தூதுவர்!





