ஆப்கானில் பெண்கள் உணவங்களுக்கு செல்ல தடை; மேலும் புது தடையை விதித்துள்ள தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவங்களுக்கு செல்ல தாலிபான்கள் தடை விதித்துள்ள செய்தி உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து கடுமையான சட்டங்களை பிறப்பித்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது.பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே செல்ல கூடாது என்றும், மேல் நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை என தொடர்ந்து பெண்களை ஒடுக்கும் வகையான சட்டங்களை கொண்டு வருகிறது.
ஆண் துணை இல்லாமல் பெண்களால் எங்கும் செல்ல முடியாது என்ற ஒரு சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில் தாலிபான்களால் ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெராட்டில் உள்ள துணை மற்றும் அறம் இயக்குநரகத்தின் துணை அதிகாரியான பாஸ் முகமது நசீர் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளைக் கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என கூறியுள்ளார்.மேலும் அவர் சாதாரண மக்களிடமிருந்து பலமுறை பெறப்பட்ட புகார்களுக்குப் பிறகு, நாங்கள் வரம்புகளை நிர்ணயித்து இந்த உணவகங்களை மூடினோம். என கூறியுள்ளார்.