ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி
கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை எல்லைக்கும் இடைப்பட்ட பகுதியான நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை இட்டுள்ளனர்,
அப்போது ஆட்டோவின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த தனி படை போலீஸ் சார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்,
அப்போது கஞ்சாவை திருப்பூர் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது இதற்கு அந்த ஆட்டோ டிரைவரும் உடந்தையாக இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது,
பின்னர் ஆட்டோவில் இருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா விற்ற பணம் 18,000 மற்றும் மற்றும் டோர் டெலிவரிக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.