வெளிநாட்டவர் சிங்கப்பூரில் கைது – விசாரணையில் வெளிவந்த தகவல்
சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவாஸ் சோதனை சாவடி வழியே நடந்தே நுழைய முயன்றபோது, கடந்த மார்ச் 23ஆம் திகதி நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளது.
அதாவது, “அந்த நபர் சிங்கப்பூர் நோக்கி துவாஸ் இரண்டாவது இணைப்பில் நடந்து செல்வதைக் துவாஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் கண்டனர்.”
இதனால் போக்குவரத்து பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் அவர் உடனடியாக மறிக்கப்பட்டார்.
பின்னர், அதிகாரிகள் அவரை சோதனை செய்யதபோது, அவரிடம் எந்த அடையாள அட்டை அல்லது பயண ஆவணங்களும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)