பிரான்ஸில் நாடளாவிய வேலை நிறுத்தம் 7ஆவது நாளாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு மாற்றப்படுவதற்கு எதிரான நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.
ஓய்வு வயதை 64க்கு உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வலியுறுத்தித் தொழிற்சங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ஓய்வு வயது தற்போது 62ஆக உள்ளது. வேலைநிறுத்தத்தால் ரயில் சேவைகள் பெரிதும் தடைபட்டுள்ளன. அதனால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.
எரிபொருள் விநியோகத்திலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரலுக்கு முன்னர் பிரான்சின் நாடாளுமன்றம் அந்த மசோதாவை நிறைவேற்றும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
ஆனால் அதை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.