ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 6 தடவைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்

பிரான்ஸில் ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் La Valette-du-Var (Var) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய நபர் ஒருவர் தனது மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

தலையில், மார்பில் சுடப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கின்றில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி