தொடர் தோல்விகள்; 960ஆவது முயற்சியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற 63 வயது பெண்!
தென்கொரியாவில் பெண் ஒருவர் 960ஆவது முயற்சியில் தேர்ச்சிபெற்று வெற்றிகரமாக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
69 வயது சா சா-சூன் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக ஓட்டுநர் உரிமத்திற்கான எழுத்துபூர்வத் தேர்வை எழுதினார். அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை.
பின்னர் அந்தத் தேர்வைத் தினமும் வாரத்தில் 5 நாள்களுக்கு மீண்டும் மீண்டும் எழுதினார். அது 3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. மொத்தம் 780 முயற்சிகள் செய்தபோதும் இருந்தும் கைவிடவில்லை சா சா-சூன். வாரத்திற்கு இருமுறை தேர்வை எழுதி வந்தார்.ஒரு வழியாகத் தேர்ச்சியும் பெற்றார். அடுத்து செய்முறைத் தேர்வு, 10 முயற்சிகளுக்குப் பிறகு தேர்ச்சி பெற்றார். உரிமத்தையும் பெற்றார்.
தமது காய்கறி விற்பனை வியாபாரத்திற்கு ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.ஓட்டுநர் உரிமம் பெற அவர் செய்த மொத்தச் செலவு 18,000 வெள்ளிகளாம். ஓட்டும உரிமம் பெற சா சா சூனின் முயற்சிகள் அவரை ஒரு பிரபலமாகவே ஆக்கிவிட்டது. அதேசமயம் அவர் Hyundai விளம்பரத்திலும் தோன்றியுள்ளார்.
மேலும் Hyundai நிறுவனம் அவருக்கு ஒரு புதிய காரையும் பரிசாக வழங்கியுள்ளது.