சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதித் திட்டத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஃ
எதிர்வரும் வரும் ஜூலை 1ஆம் திகதி முதற்கொண்டு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் S-pass, வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர், வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஆகியோருக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்தத் திட்டம் அவர்களையும் அவர்களது முதலாளிகளையும் பாதுகாக்கும்.
புதிய வரம்பின்படி, ஆண்டுக்கு 60-ஆயிரம் வெள்ளிவரை செலுத்திய கட்டணத்தைக் கோரமுடியும்.
99 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டணங்கள் அந்தத் தொகைக்குள் வந்துவிடும் என்று மனிதவள அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
தற்போதைய வரம்பு 15 ஆயிரம் வெள்ளி. செலுத்தப்பட்ட மருத்துவக் கட்டணங்களில் சுமார் 5 விழுக்காடு அதைத் தாண்டிவிடுகின்றன.
உதாரணத்துக்கு, ஊழியர் ஒருவரின் மருத்துவக் கட்டணம் 70-ஆயிரம் வெள்ளி என்றால், அதில் முதல் 15 ஆயிரம் வெள்ளியைக் காப்புறுதி நிறுவனம் கொடுத்துவிடும். முதலாளிகள் எஞ்சியதைத் தரவேண்டும்.
புதிய மாற்றத்தின்படி, எஞ்சிய 55 ஆயிரம் வெள்ளியில் காப்புறுதி நிறுவனம் 75 விழுக்காட்டைக் கொடுக்கும்.
இந்த ஆண்டின் ஜூலை மாதத்திலும் 2025ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலும் என்று மாற்றங்கள் 2 கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும்.
காப்புறுதித் திட்டங்கள், அவற்றைப் புதுப்பித்தல் அல்லது நீட்டித்தல் ஆகிய மாற்றங்கள் அதில் அடங்கும்.