சிங்கப்பூரில் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முத்தரப்புச் செயற்குழு அந்த வேண்டுகோளை முன்வைத்தது.
சுகாதார அமைச்சு, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் சங்கம், மருத்துவச் சேவை அமைப்புகள் ஆகியவை பணிக்குழுவில் உள்ளன.
3000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.
பலர் தொல்லையை அனுபவிப்பது தெரியவந்தது. நோயாளிகளும், அவர்களைப் பார்க்க வருபவர்களும் தாதியர் போன்ற நேரடிச் சேவையில் ஈடுபடுபவர்களுக்குத் தொல்லை கொடுக்கின்றனர். அவர்களிடம் சிலர் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.
சுகாதாரத் துறையினருக்குப் பாதுகாப்பு தேவை என்று முத்தரப்புக் குழு வலியுறுத்துகிறது.