செய்தி தமிழ்நாடு

கேரளா ஆட்டோவில் மோதிய லாரி சம்பவ இடத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர்

சூலூரில் கேரளா ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் மோதி விட்டு தப்பி ஓடிய லாரி மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்

கோவை மாவட்டம் சூலூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்  நான்கு மணி அளவில் நீலாம்பூர் டோல்கேட்டை தாண்டி கேரள பதிவு எண் கொண்ட பயணிகள்  கொண்ட ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அதில் கேரளாவைச் சேர்ந்த சசிக்குமார்(48) ஆட்டோவை ஓட்ட மற்றும் சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த இளம்வழுதி(52) பின்னால் அமர்ந்து கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது குளத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதில் ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் ஆட்டோ இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் ஆட்டோவில் பயணித்த சேலம் சின்ன திருப்பதி சேர்ந்த இளம்வழுதி என்பவர் பலத்த காயங்களுடன் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தார்.

சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை பிரித்து எடுத்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் மீட்டனர் இதில் சசிகுமார் உயிரிழந்த நிலையில் இளம்வழுதியை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ மீது  மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி