குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா
வடகொரியா இன்று (13) இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து நடத்திய ராணுவப் பயிற்சியால், வடகொரியா இப்படி எதிர்வினையாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைகள் 620 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன
(Visited 1 times, 1 visits today)