செய்தி தமிழ்நாடு

கழிவு நீரை அப்புறப்படுத்திய காவலர்

சென்னை வண்ணாரப்பேட்டை மணியக்காரர் சத்திர சாலை துணிக்கடைகள் நிறைந்த சாலையில் இன்று காலை 51 வது வார்டு பகுதியில் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடியது,

இதை கண்ட அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியை சரி செய்து கொண்டு இருந்த வண்ணாரப்பேட்டை எச்1 போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் ரவிக்குமார் அங்கு கடைகளில் தேங்கியுள்ள தண்ணீரை தள்ளுவதற்கு வைத்துள்ள உபகரணத்தை வாங்கி வந்து சாலையில் தேங்கி இருந்த கழிவு நீரை பொதுமக்கள் வசதிக்காக அப்புறப்படுத்தினார்,

இதை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த துணிக்கடை வியாபாரி ராஜசேகர் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது இப்போது வைரலாக பரவி வருகிறது மேலும் இதனால் கழிவு நீரை அப்புறப்படுத்திய வண்ணாரப்பேட்டை போக்குவரத்து தலைமை காவலர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்கள் பொதுமக்களின் இடமிருந்து குவிந்து வருகிறது.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி