கருங்கடல் பகுதியில் ஏவுகணைகளுடன் கூடிய 20 கப்பல்களை நிலைநிறுத்திய ரஷ்யா!
கருங்கடலில் ரஷ்யா வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தெற்கு கட்டளை செய்தித் தொடர்பாளரை மேற்கோளிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தற்போது ரஷ்யா 20 கப்பல்களை கடற்பரப்பில் நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் நான்கு ஏவுகணை தாங்கிகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று நீருக்கடியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து அதிகபட்சமாக 28 ரொக்கெட்டுகள் ஏவுவதற்காக பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்களை தேடுவதற்காகவும், இந்த கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் உக்ரைன் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)