இலங்கையின் வலுவான கொள்கை உருவாக்கத்துக்கு நான் முன்னுரிமையளித்துள்ளோம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு
கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் பொருளாதார அதிர்வுகளின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
இந்நெருக்கடியின் காரணமாக இலங்கை மக்களின்மீது, குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், வெளியக நிதியீட்டலில் நாடு எதிர்கொண்டிருக்கும் தாமதம் தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது,
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதியானது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கான தீர்வை நோக்கிய மிகமுக்கிய நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.
மேலும் நீடித்த நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களின் போது நாம் வலுவான கொள்கை உருவாக்கத்துக்கு முன்னுரிமையளித்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
அதன்படி முறையான வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு, நிதிக்கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பு, அத்தியாவசிய பொதுச்செலவினங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசின் இயலுமையை உறுதிப்படுத்தும் வகையில் செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய வலுசக்தி (எரிபொருள்) விலையிடல் முறைமை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதியியல் இயலுமையை நிலைநாட்டுதல் உள்ளடங்கலாக கடன்மறுசீரமைப்பின் ஊடாக பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல்,
விலை உறுதிப்பாட்டை மீளக்கட்டியெழுப்புவதுடன் செயற்திறனான நாணயமாற்று விகிதத்தின்கீழ் வெளிநாட்டுக்கையிருப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியில் நிதியியல் துறை முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியியல் துறை ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான கொள்கை உருவாக்கம், ஊழல்மோசடிகளைக் கையாள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவான வகையிலான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
இத்தகைய சவாலான கொள்கைசார் செயன்முறைகளை இலங்கை ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
இலங்கை அரசாங்கமும், பொதுமக்களும் இம்மறுசீரமைப்புக்களின் அமுலாக்கத்தை மே