அமெரிக்காவில் பூஞ்சையால் ஏற்படும் நோய் – அச்சுறுத்தும் பாதிப்பு

அமெரிக்காவில் பூஞ்சையால் ஏற்படும் நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய நோய் கட்டுப்பாடு மையம் இது தொடர்பில் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது கேண்டிடா ஆரிஸ் எனப்படும் பூஞ்சை மூலமாக புதிய நோய் தொற்று உருவாகியுள்ளது. இது தற்போது வேகமாக பரவி வருவதாக அமெரிக்காவின் மத்திய நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த பூஞ்சை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் 2016 முதல் , 2021 வரை மொத்தம் 7,413 இந்த நோய் தொற்று உறுதியாகி உள்ளதாக நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் இந்த பூஞ்சையின் பாதிப்பு மூன்று மடங்காக பெருகியுள்ளது என்று சுகாதார மையம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த கேண்டிடா ஆரிஸ் எனப்படும் பூஞ்சை பாதித்தவர்களை எளிதில் குணப்படுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.