மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாதனை படைத்தனர்.
இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை.
அந்தச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 62 வயது ரிச்சர்ட் சிலேமனின் உடல்நலம் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.
அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவர் வீடு திரும்ப அனுமதித்தனர்.
அவருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு செயல்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிலேமன் வீடு திரும்பிவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
(Visited 12 times, 1 visits today)