கரூர் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்படும் விஜய்?
தமிழ்நாட்டின் கரூர் பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆணையம் பரிந்துரைத்தால் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே, முதலில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் விளக்கியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் அரசியல் உள்நோக்கங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சில பொதுமக்களின் அசமந்த போக்கே இந்த உயிர்பலிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர், பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தடுத்து வரும் பிரச்சாரக் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





