வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாடளாவிய ரீதியில் நாளைய (25.08) தினம் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.





