காவலில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு பிரெஞ்சு அதிகாரிகள்
இரண்டு பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகள் காவலில் இருந்தபோது ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் தனது தொலைபேசியில் இந்த செயலை படம்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸின் வடகிழக்கு புறநகரின் பாபிக்னியில்(Bobigny) உள்ள நீதிமன்றத்தில் காவலில் இருந்தபோது தன்னைத் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, அதிகாரிகள் ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
26 வயதுடைய பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட 23 மற்றும் 35 வயதுடைய இரண்டு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவாவ்(Laure Becouveau) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டு அதிகாரிகள் மீதும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று லாரே பெக்குவாவ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய மாதங்களில் பிரான்சில் தொடர்ச்சியான உயர்மட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்துள்ளன.





