ட்விட்டர் நிறுவன CEOஆக தனது பணியை இன்று தொடங்கினார் லிண்டா யக்காரினோ
ட்விட்டர் நிறுவன CEO-ஆக தனது பணியை லிண்டா யக்காரினோ இன்று தொடங்கினார். ட்விட்டர் வளர்ச்சிக்காக எலன் மஸ்க்குடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்தார்.
கடந்த மாதம் டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ட்வீட் மூலம் குறிப்பிட்டுள்ளார் லிண்டா.
இதை அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார். பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.
இந்தச் சூழலில் லிண்டாவை புதிய சிஇஓ என மஸ்க் அறிவித்தார். அதோடு ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைமை மற்றும் சிடிஓ என தனது செயல்பாடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மஸ்க்கின் ட்விட்டர் 2.0-வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் லிண்டா அப்போது தெரிவித்திருந்தார். ட்விட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என தெரிகிறது.
என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த ஜோ பெனாரோச்சை அவர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளார்.
இது லிண்டா மற்றும் ஜோ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘ட்விட்டர் 2.0-வை கட்டமைப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்’ என ஜோ தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில், ட்விட்டர் CEO பதவியில் இருந்து தான் விலக வேண்டுமா என மஸ்க் கருத்து கேட்டதற்கு, 57.5% பேர் ஆம் என்று பதிலளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.