05 பில்லியன் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு தாக்கல் – பிபிசி கூறுவது என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிபிசிக்கு எதிராக 05 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி தமாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான பனோரமா ஆவணப்படமொன்றில் தனது உரை திருத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புளோரிடாவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒளிபரப்பாளர், அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் வர்த்தக நடைமுறைச் சட்டத்தை மீறியதாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே, கடந்த மாதம் பிபிசி ட்ரம்பிடம் மன்னிப்பு கோரியிருந்தது. ஆனால், இழப்பீடு வழங்க முடியாது என்றும், அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
பிபிசி திட்டமிட்டு மற்றும் ஏமாற்றும் விதத்தில் அவரது உரையை திருத்தி, அவருக்கு தீங்கு விளைவித்ததாக ட்ரம்பின் சட்டக் குழு கூறியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பிபிசி தற்போதும் பதில் அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படத்திற்காக பிபிசி மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் கடந்த மாதம் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி தற்போதும் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அவதூறு வழக்குக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என தெரிவித்துள்ளது.
வழக்கை முழுமையாக சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் பிபிசி அறிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் VPN மற்றும் BritBox போன்ற சேவைகள் மூலம் பார்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ட்ரம்ப் தரப்பு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் பிரித்தானிய அரசு, இது பிபிசி தொடர்பான சட்ட விவகாரம் என்பதால் அரசு தலையிடாது என தெரிவித்துள்ளது.





