திரிஷா – நயன்தாரா இடையே மோதல்?? உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் திரிஷா தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் த்ரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய த்ரிஷா தனக்கும் நயன்தாராவுக்கு பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான் என்று அவர் கூறியுள்ளார்.

அது தொழில் காரணங்களால் வந்தது இல்லை, தனிப்பட்ட முறையில் வந்தது என்று கூறிய த்ரிஷா, காலம் செல்ல செல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். இப்போது நண்பர்களாகவே இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக குருவி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தான் எனவும், அந்த வாய்ப்பை த்ரிஷா தட்டி பறித்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானதாக ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)





