அலரி மாளிகைக்கு முன் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
இன்று (01) பிற்பகல் அலரி மாளிகைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென் தீப்பற்றி எரிந்துள்ளது.
கொழும்பை நோக்கிச் செல்லும் பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி அலரி மாளிகையின் முன் நுழைவாயிலுக்கு முன்பாக தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் தீயணைப்பு வாகனம் வந்து தீயை முழுமையாக அணைத்ததாக கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





