நடுவானில் தீப்பிழம்புகளை வெளியேற்றிய விமானம் : மரணத்தை கண்முன் பார்த்த பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு பயணித்த விமானம் இடைநடுவில் தீ பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விர்ஜின் விமானம் VA148 – 737 மெல்பேர்னுக்கு பயணித்த போது எதிர்பாராத விதமாக என்ஜினில் இருந்து தீ வெளியேறியுள்ளது.
இதனையடுத்து நிலைத்தடுமாறிய விமானி விமானத்தை திசை திருப்பி இன்வர்கார்கில் தரையிறக்கியுள்ளார்.
இதில் விமானி உள்பட பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவைக் கடக்கும் போது விமானம் தீப்பிழம்புகளை வீசத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
(Visited 20 times, 1 visits today)