உலகில் வேகமாக அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கை!

உலகில் வேகமாக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இப்போது 120 மில்லியன் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர்.
போர், வன்முறை, அடக்குமுறை ஆகியவை மக்கள் அகதிகளாகச் செல்லக் காரணங்களாகும். ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு சுமார் 117 மில்லியன் அகதிகள் இருந்தனர்.
இவ்வாண்டு முதல் நான்கு மாதங்களில் மேலும் மூன்று மில்லியன் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். ஏப்ரல் மாதக் கடைசிவரை உள்ள கணக்கை இன்றைய அறிக்கை காட்டுகிறது.
காஸா, மியன்மார், சூடான் ஆகிய இடங்களில் மோதல் நடைபெறும் நிலையில் உலக அகதிகள் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
12 ஆண்டாகத் தொடர்ந்து அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக உலக நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு சொல்கிறது.
(Visited 29 times, 1 visits today)