சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டவருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோவா சூ காங்கில் சிறுமியிடமே குறித்த நபர் தவறாக நடந்துக் கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 5) காலை 9 மணியளவில், பிளாக் 803 கீயட் ஹாங் க்ளோஸின் படாலிங் காபிஷாப்பில் (Badaling Coffeeshop) இந்த சம்பவம் நடந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.
ஊழியர் துப்பரவு பணியாளராக வேலை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் தயார் கூறியதாவது; அந்த வக்கிர புத்தி கொண்ட நபர் சிறுமியை அவரின் வீட்டிற்கு அழைத்தார், அதனை மறுத்ததால் சிறுமி மீது அந்த நபர் கை வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஊழியர் சிறுமியின் மறைவிடங்களில் கைவைத்ததாகவும் அவரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். பயத்தில் திகைத்த சிறுமி உடனே தாயாரிடம் வந்து சொல்ல, அவர் பொலிஸார் அழைத்தார்.
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அன்று மதியம் 12.49 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் நடந்து வருகின்றன.